ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தாரா; மு.க.ஸ்டாலின் கேள்வி!

 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தாரா; மு.க.ஸ்டாலின் கேள்வி!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இதுவரை இரங்கல் தெரிவித்தாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

sterlite gun shot

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

stalin, kanimozhi

இந்நிலையில், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை இரங்கல் தெரிவித்தாரா? தமிழகத்தில் நடந்த கொடூரம் தொடர்பாக வாய் திறக்காத மோடியை பாசிஸ்ட் என கூறுவதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறிய ஸ்டாலின், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மறு விநாடியே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.

இதையும் வாசிங்க

தூங்காத என் கண்களை பார்த்து வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!