‘ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளது’ – கமல்ஹாசன் வருத்தம்

 

‘ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளது’ – கமல்ஹாசன் வருத்தம்

ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை: ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன் நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. 

இந்த விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் மெத்தனப்போக்கே ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

sterlite

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது. அரசு, உச்ச நீதிமன்றமெல்லாம் சென்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற மிருதுவான நடவடிக்கைகள் போதாது. மக்களைக் காக்கவேண்டும் என்று வரும்போது அழுத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான மரியாதை எப்போதும் உண்டு என்றும், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் செல்வதால், அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பேட்டியை காண: