ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தொடர்புடையவர்கள் என் கணவரை கடத்தியுள்ளனர்- முகிலனின் மனைவி

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தொடர்புடையவர்கள் என் கணவரை கடத்தியுள்ளனர்- முகிலனின் மனைவி

விபத்து ஏற்படுத்திய காரை ஒரு இடத்தில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள வாடகை காரில் சென்னைக்கு வந்தார். சென்னை வந்து முகிலனை சந்தித்து பூங்கொடி 10 நிமிடம் பேசினார்.

முகிலன் கிடைத்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் இன்று காலை ஈரோடிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த சமூக ஆர்வலர் முகிலன் மனைவி பூங்கொடி வந்த கார் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் கார் டயர் வெடித்த விபத்தில்  டிரைவர் கட்டுபாட்டை மீறி  சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியா கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பூங்கோடிக்கும் உடன் பயணித்த ஒருவருக்கும் இலேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை இருந்து சென்னைக்கு காரில் வந்த போது விபத்து ஏற்பட்டது

விபத்து ஏற்படுத்திய காரை ஒரு இடத்தில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள வாடகை காரில் சென்னைக்கு வந்தார். சென்னை வந்து முகிலனை சந்தித்து பூங்கொடி 10 நிமிடம் பேசினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பூங்கொடி, “ இன்று காலை நடந்த எனக்கு நடந்த விபத்து திட்டமிட்டு நடந்நதுத் போலீஸ் விசாரிக்க வேண்டும். முகிலனின் மனநிலை நிதானமாக இல்லை. போராடினால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு முகிலன். அவரை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தொடர்பானவர்கள் கடத்தியுள்ளனர். கடத்திச்சென்று சித்ரவதை செய்துள்ளனர். நாய் கடித்த காயமுள்ளது. அவர் மீது போடப்பட்ட பாலியல் வழக்கு மிகுவும் பொய். அதுமட்டுமின்றி முகிலனை சிறையில் அடைத்தும் கொடுமை படுத்தியுள்ளனர். அணுக்கழிவு கருத்து கேட்பு கூட்டத்தில் முகிலன் பங்கேற்கக்கூடாது என்பதற்காக சிலர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.