ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல்

 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக அந்த நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என கூறியிருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு மேற்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.