ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்!

 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்:  சரத்குமார் வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனது சட்டப்போராட்டத்தை தமிழக அரசு
தொடர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனது சட்டப்போராட்டத்தை தமிழக அரசு
தொடர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை
ரத்து செய்தும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின்
வேதனைகளை உணர்ந்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் கிடைத்துள்ள
இந்த சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா
நிறுவனம் செய்த மேல்முறையீட்டில், கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலையை
மீண்டும் திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவினை
மறுசீராய்வு செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை முடிந்து, அனைத்து தரப்பு
மக்களும் மகிழும் வகையில் கிடைக்கப்பெற்றிருக்கும் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பினை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மகிழ்வுடன் வரவேற்கிறது.

மேலும், ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுக
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை கவனத்தில் கொண்டு, தற்காலிக தீர்வாக இத்தீர்ப்பு
அமையாமல் நிரந்தரத் தீர்வாக அமையும் வரை தனது சட்டப்போராட்டத்தை தமிழக அரசு
தொடர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.’

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.