ஸ்டிரைக் செய்தால் சம்பளம் ‘கட்’: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை

 

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் ‘கட்’: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை

பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை (ஜன.,22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், தலைமை செலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் வேலைக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது. 
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு விடுப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி 22 ம் தேதி காலை 10.30 மணிக்குள் ஊழியர்களின் வருகை பதிவு குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை தினமும் வருகை பதிவு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.