ஸ்டாலின் ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக்குக்கும் அடிமை… பொளேர் விமர்சனம்..!

 

ஸ்டாலின் ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக்குக்கும் அடிமை… பொளேர் விமர்சனம்..!

சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற்று இப்படியே எதிர் கட்சி தலைவர் பதவியில் நிரந்தரமாக இருக்கட்டும்.
அவர்கள் ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக்குக்கும் இவர்கள் அடிமை. அவர்கள் கட்சியை இனி திராவிட மைனாரிட்டி கழகம் என்று அழைக்கலாம்.

தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி, சென்னையில், வரும், 23ல் நடக்கிறது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் மதவாத அரசியலை பலரும் எள்ளி நகையாடி வருகின்றனர். முன்பு திமுக அனுதாபியாக இருந்த ஒருவர், ‘’தயவுசெய்து பெரும்பான்மையானவர்கள் திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள். அவர்கள் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற்று இப்படியே எதிர் கட்சி தலைவர் பதவியில் நிரந்தரமாக இருக்கட்டும். stalin

அவர்கள் ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக்குக்கும் இவர்கள் அடிமை. அவர்கள் கட்சியை இனி திராவிட மைனாரிட்டி கழகம் என்று அழைக்கலாம். தொடர்ந்து மேலும் ஐந்தாண்டுகள் எதிர்கட்சி வரிசையில் உட்கார வேண்டுகிறேன். இவர்களின் கபட நாடகத்தை புரிந்தவர்கள் கண்டிப்பாக ஆதரவு தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கோயிலில் பொட்டு வைத்தால் அழிப்பார். ஆனால் தேவாலயத்தில் ஆப்பம் வாயில் ஏற்றுக்கொள்வார். இவர் மனைவி கோயில் போகலாம். விரதம் பிடிக்கலாம. ஆனால் கட்சி குப்பனும், சுப்பனும் செய்யமுடியாது. கட்டுமரம் கொள்கைக்கு எதிரானது. stalin

தமிழகத்தில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாய் முடித்தபோது இல்லாத போராட்ட உணர்வு, தங்கள் நாட்டில் தங்களுடைய மதத்தவருடன் வாழமுடியாமல் சட்டப்பூர்வமற்ற முறையில் இந்தியாவால் ஊடுருவும் மக்களுக்கு குடியுரிமை வழங்கும்போது வருகிறது.  இன்னொரு எமெர்ஜென்சி வந்தால்தான் சரியாகும் போல’’ எனக் கொதிக்கிறார்கள்.