ஸ்டாலின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுத வைகோ: எதற்காக தெரியுமா?

 

ஸ்டாலின் பேச்சை கேட்டு கண்ணீர்  விட்டு அழுத வைகோ: எதற்காக தெரியுமா?

கருணாநிதியின் நினைவலைகளை மு.க.ஸ்டாலின் பேசும் போது, வைகோ மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

திருச்சி: கருணாநிதியின் நினைவலைகளை மு.க.ஸ்டாலின் பேசும் போது, வைகோ மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

ம.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா நேற்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது மற்றும் ம.தி.மு.க.,வை சட்டப்பிரிவுச் செயலாளர் வழக்குரைஞர் வீரபாண்டியன் எழுதிய,  ‘தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை’ எனும் புத்தக  வெளியிடப்பட்டது.

stalinmk

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஸ்டாலின், ‘ தலைவர் கலைஞர் வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் வீட்டில் சில வருடங்கள் ஓய்வெடுத்த வந்த நிலையில், அவரைச் சந்தித்த வைகோ, கலைஞரின் கையைப் பிடித்து, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் அந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறவேன். தலைவர் கலைஞர் சொன்ன வார்த்தைகளை வைகோ மீறியதே இல்லை. குறிப்பாக பொடாவில் வைகோ இருந்தபோது வைகோவின் கைகளைப் பிடித்துக் கலங்கியபடி பிணையில் வெளியே வா, உடலை வருத்திக்கொள்ளாதே எனக் கூறினார். அதனையடுத்துதான் வைகோ சிறையிலிருந்து வெளியே வந்தார்’ என்று கூறினார். இதைக் கேட்ட வைகோ,  மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் 40-க்கும் 40 தொகுதிகளைப் பெறப் புயல்வேகப் பயணத்துக்கு வைகோ தயாராகி விட்டார். மத பயங்கரவாதத்தை முறியடிக்கத் தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்’ என்றார்.