ஸ்டாலின் சவாலை நிறைவேற்றுவது தி.மு.க ஆட்சிக்கு வருவதுபோல் கடினமானது! – ஏ.கே.மூர்த்தி நக்கல்

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது என்று தி.மு.க பல்டி அடித்துவிட்டதாக டாக்டர் ராமதாஸ் ட்வீட் செய்திருந்தார். அதற்கு பா.ம.க நிர்வாகி ஏ.கே.மூர்த்தியும் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

pmk

அதில், “சவால் விடுவது என்பது கலைஞர் குடும்பத்தினர் திமுகவில் பொறுப்பிற்கு வருவது போல் மிக மிக எளிதானது.

அச்சவாலை சாதிப்பது என்பதுதான் திமுக ஆட்சிக்கு வருவது போல மிக மிக கடினமானது.அரசியலை விட்டு விலகத்தயாரா என சவால் விட்டு இப்போது வாடகை கட்டிடம் என்பதெல்லாம் அந்தர் பல்டி 
ஸ்டாலின்  சார்.” என்று கூறியுள்ளார்.