ஸ்டாலினை மீண்டும் வம்புக்கு இழுத்த ராமதாஸ்! – வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய ட்வீட்டை ரீட்வீட் செய்தார்

 

ஸ்டாலினை மீண்டும் வம்புக்கு இழுத்த ராமதாஸ்! – வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய ட்வீட்டை ரீட்வீட் செய்தார்

சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜாவுக்கு தேர்தல் பிரிவு செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் பற்றி முன்பு வௌியிட்ட ட்வீட்டை டாக்டர் ராமதாஸ் ரீட்வீட் செய்துள்ளார்.

சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜாவுக்கு தேர்தல் பிரிவு செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் பற்றி முன்பு வௌியிட்ட ட்வீட்டை டாக்டர் ராமதாஸ் ரீட்வீட் செய்துள்ளார்.
தி.மு.க-வில் மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்துவந்த நேரு, வீரபாண்டி ராஜா உள்ளிட்டவர்களுக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டது. வீரபாண்டி ராஜாவின் பதவியை பறித்துவிட்டு, பெயரளவுக்கான உயர் பதவியை ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

veerapandi-raja

இந்த நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வகையில், டாக்டர் ராமதாஸ் கடந்த நவம்பர் 18ம் தேதி வெளியிட்ட ட்வீட்டை பிப்ரவரி 3ம் தேதி ரீட்வீட் செய்துள்ளார். 
கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’ என்ற புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட்டார்.

dravida-iyakka-varalaru

அதற்கு மறுநாள் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சேலம் சிங்கத்தின் சிதைக்கப்பட்ட வரலாறு என்று தலைப்பிட்டு, அந்தப் புத்தகத்தில் வீரபாண்டி ஆறுமுகம் எழுதிய பல செய்திகள் விடுபட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
“சேலம் மாவட்டத்தின் தமக்கு கீழ் பணி செய்த ஒருவர் துரோகம் செய்ததால் அவரை வீரபாண்டியார் விரட்டியடித்துள்ளார். அப்படிப்பட்டவரையே தமக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்ய வைத்து ஸ்டாலின் அவமதித்தார் என்ற தமது வருத்தத்தையும் அந்த நூலில் வீரபாண்டியார் விரிவாக குறிப்பிட்டிருந்தார். அந்த பகுதியும் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் நூலில் இல்லை.
2012-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டியார் விரிவாக பதிவு செய்திருந்தார். இதுகுறித்த விவரங்களையும் ஒரு தருணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால், இந்த விவரங்களும் வீரபாண்டியாரின் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது”என்று கூறியிருந்தார்.
இந்த பழைய பதிவை மீண்டும் நினைவுபடுத்தியதன் மூலம் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஸ்டாலின் அநீதி இழைத்ததைப் போல வீரபாண்டி ராஜாவுக்கும் இழைத்துவிட்டார் என்பது போன்ற தோற்றத்தை தான் சார்ந்த சமூக மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயன்றுள்ளார். வீரபாண்டி ராஜாவை பா.ம.க பக்கம் இழுக்கவும் ராமதாஸ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே முரசொலி இடம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று ட்வீட் செய்து ஸ்டாலினை வம்பில் இழுத்துவிட்டார் ராமதாஸ். ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று தி.மு.க தரப்பில் கூறியபோதும், மழுப்பலான பதிலை அளித்துவருகிறார் ராமதாஸ். இந்த நிலையில் புதிதாக பிரச்னைக்கு தூபம் போட்டுள்ளார் ராமதாஸ்.