ஸ்டாலினை தொடர்ந்து ராகுலை ஆதரிக்கும் குமாரசாமி

 

ஸ்டாலினை தொடர்ந்து ராகுலை ஆதரிக்கும் குமாரசாமி

திமுக தலைவர் முக ஸ்டாலினை தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

பெங்களூரு: திமுக தலைவர் முக ஸ்டாலினை தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு அவரை பாராட்டி பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதுகுறித்து எண்டிடிவிக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் உள்ளவர்களை காட்டிலும் இங்கே பல அரசியல் ஆளுமைகள் இருக்கின்றனர். மம்தா கூட சிறந்த நிர்வாகிதான், அவருக்கும் இந்த நாட்டை வழிநடத்திச் செல்ல தகுதி இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சி சார்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்.

கர்நாடகாவில் காங்கிரஸும், குமாரசாமியின் ஜனதா தள கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் ஆதரவு தெரிவிக்கிறார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.