ஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

 

ஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “ முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு இல்லாமல் சென்றுள்ளது. நிவர் புயலில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காக்க பெற்றுள்ளது. புயலையும் பொருப்படுத்தாமல் முதல்வர் குடையை பிடித்து கொண்டு நேரில் ஆய்வு செய்தார். ஸ்டாலின் ஆய்வு விளம்பரம் தேடுவதாக மட்டுமே இருந்தது. முதல்வரின் நடவடிக்கையால் வீடியோ கான்பிரன்ஸில் இருந்த ஸ்டாலின் நேரில் தெருவிற்கு வந்து ஆய்வு செய்கின்றார். புயலை வைத்து திமுக விளம்பரம் தேடி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் எவ்வாறு பிரச்சாரம் செய்வார் என தெரியவில்லை. குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல ஸ்டாலின் உதயநிதியை விட்டு அரசியல் ஆழம் பார்க்கிறார். திமுகவில் உதயநிதி கட்டாயமாக திணிக்கப்படுகிறார்.

ஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக நாடக கோஷ்டி போல ஆகி விட்டது. தமிழக மக்கள் போலியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள். திமுக ஆட்சி காலத்தில் புயலின் போது செய்த உதவிகளை ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும்.. முதல்வர் ஏழை , எளிய மக்களுக்கு அள்ளி கொடுப்பவர். நிதி இருந்தால் முதல்வர் மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஸ்டாலின் சொல்லிதான் நிதியை கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை” எனக் கூறினார்.