ஸ்டாலினைப் போல் மிமிக்ரி செய்து கலாய்த்த டிடிவி – வீடியோ

 

ஸ்டாலினைப் போல் மிமிக்ரி செய்து கலாய்த்த டிடிவி – வீடியோ

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை, டிடிவி தினகரன் கிண்டல் செய்துள்ளார்.

சென்னை: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை, டிடிவி தினகரன் கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பாணியில், “ராகுல் காந்தியே வருக.. நாட்டுக்கு நல்லாட்சியை தருக!” என ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.

இதற்குத் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்குப் பின்னர் பிரதமரைத் தேர்வு செய்வது தான் ஜனநாயக முறையாக இருக்கும் என கூறியிருந்தார்.

ஸ்டாலினை கலாய்த்த வீடியோ:

இப்படி திமுக கூட்டணிக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ள சூழலில், நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ராகுல் காந்தியே வருக.. நிலயான ஆட்சியை தருக” என மு.க.ஸ்டாலினின் குரலில் மிமிக்ரி செய்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.