‘ஸ்டாலினின் பேச்சு புல் அரிக்கிறது’ – தமிழிசை

 

‘ஸ்டாலினின் பேச்சு புல் அரிக்கிறது’ – தமிழிசை

கொல்கத்தாவில் ஸ்டாலின் பேசியது தமக்கு புல் அரிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை: கொல்கத்தாவில் ஸ்டாலின் பேசியது தமக்கு புல் அரிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

இதற்கான பணிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் முன்னின்று செய்து வருகின்றனர். அதன் நீட்சியாக, கொல்கத்தாவில் நேற்று மம்தா நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து 22 கட்சித் தலைவர் பங்கேற்றுப் பேசினர். 

அக்கூட்டத்தில் வங்காள மொழியில் தன் பேச்சைத் தொடங்கிய ஸ்டாலின், பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பது நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என காட்டமாக பேசியிருந்தார்.

tamilisai

இந்நிலையில், ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்காள மொழியில் வணக்கம் சொன்ன ஸ்டாலின் மத்திய பிரதேசத்தில் கூட்டம் நடந்தால் இந்தியில் பேசுவாரா? மாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறுகிறார்.

சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த ஸ்டாலின், கொல்கத்தாவில் கூட்டணி மேடையில், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் அதை சொல்ல பயந்தது ஏன்? 

விஞ்ஞானபூர்வமான ஊழல் கண்டுபிடிப்பு பட்டயம் வாங்கிய திமுக வாரிசு ஊழலு பற்றி பேசலாமா? மோடி ரூ.15 லட்சம் போடுவேன் என்று எங்கு? எப்போது சொன்னார்? சான்று காட்ட முடியுமா?

அடைந்தால் திராவிட நாடு என்று வீரவசனம் பேசி ஆட்சி சுகம் கண்டது திமுக கொல்கத்தா கூட்டத்தில் 2-ம் சுதந்திர போராட்டம்! தேசியம்! என்றெல்லாம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது புல்லரிக்கும் நடிப்பு” என பதிவிட்டுள்ளார்.