ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் வைத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற வாசகத்தை முன்மொழிந்திருக்கிறார் . இதேபோல அவர் முன்மொழிந்த மற்ற வாசகங்களையும் அவற்றால் விளைந்த நன்மைகள் திமுகவுக்கா மக்களுக்கா என்பதையும் பார்ப்போம்…

தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. ஆளும் அதிமுகவின் அமைச்சர்களும் திமுக தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். டிவி, பேஸ்புக், 18 வயது நிரம்பியவர்களுக்கான வெப்சைட் என எங்கு நோக்கினும் ஆளும் அதிமுகவின் ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ என்ற வாசகமே ஒலிக்கிறது.

இது ஒருபுறம் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் நாற்காலியை அடைய வேண்டும் என்ற நோக்கில் டிசைன் டிசைனான வாசகங்களுடன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார். இந்த வாசக பிரச்சாரத்தின் மூலகர்த்தா சாட்சாத் பிரசாந்த் கிஷோர் தான் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

கலர் கலரான வாசகங்கள் தமிழக மக்களின் மனதில் இடம்பிடிக்குமா என்று கேட்டால் சற்று சந்தேகமே. திமுகவினரால் கூட நியாபகம் வைத்துக்கொள்ளும்படி வாசகங்கள் அமையவில்லை என்றே கூற வேண்டும். மொத்தமா ஒன்னு ரெண்டுனா பராவல்ல… மாசத்துக்கு ஒன்னுனா எப்படி நியாபகம் வச்சிப்பாங்க என்று ஆளுங்கட்சிக்காரர்கள் திமுகவை கலாய்க்கின்றனர்.

வாசகங்கள் நியாபகம் வைத்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள், அதை விட்டுவிடுவோம். அதன் மூலம் மக்கள் அடைந்த பலன் குறித்து தான் நாம் பேச வேண்டும். அதைத் தான் மக்களும் எதிர்பார்ப்பார்கள்.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

கொரொனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி, பொருளாதார நெருக்கடியில் உழன்ற மக்களைச் சந்தித்து திமுக உதவிக்கரம் நீட்டியது அக்கட்சிக்கு பெரிய பெயரை வாங்கி தந்தது என்றே சொல்லலாம். இல்லை அதிமுக அதை வாங்கி கொடுத்தது என்று சொல்வதே சரியாக இருக்கும்.

லாக்டவுனால் அடுத்த வேளை சோற்றுக்கே அல்லாடிய மக்களுக்கு தன்னார்வ நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உணவு அளிக்க கூடாது என்று அதிமுக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவை ரத்துசெய்ய வைத்தார்கள். மக்கள் மத்தியில் திமுகவை ஹீரோவாக்கியது இந்நிகழ்வு.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

ஆளுங்கட்சியைக் காட்டிலும் திரும்பிய திசையெல்லாம் திமுக தான் உதவிசெய்து கொண்டிருந்தது. இதனால் தான் கொரோனா தொற்று ஏற்பட்டு ஜெ.அன்பழகன் இறந்தார் என்ற பரிதாப அலையும் திமுக இமேஜை எக்குத்தப்பாக உயர்த்தியது. இதற்குப் பின் தான் ஆளும் அரசு விழித்துக்கொண்டது என்பது தனிக்கதை.

இதேபோல கொரோனாவை காரணம் காட்டி திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, அதிமுக தன்னை உத்தம வில்லனாக காட்டிக் கொண்டது. ஆனால் தடையை மீறி கூட்டத்தை நடத்தி ஸ்டாலினுக்கு ஹீரோ இமேஜ் வாங்கி தந்தது தான் பரிதாபத்தின் உச்சம். ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற வாசகத்துடன் நடைபெற்ற ஒரு சில கூட்டங்களில் மட்டும் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

இந்தக் கூட்டத்தால் பெரிதாய் எதும் நன்மை கிடைக்கவில்லை என்றாலும், திமுகவிற்கி அனுகூலத்தை பெற்றுத்தந்தது. இதற்கு முன்பாக 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தினார்.

அக்கூட்டத்தில் கேட்கப்பட்ட மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டனவா என்று கேட்டால் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கிறது. “திமுகவ சும்மா விட்டாலே யாரும் கண்டுக்காம விட்ருப்பாங்க… தேவையில்லாம அடிச்சி இமேஜ ஏத்தி விட்டாங்க” என்று திமுக அனுதாபிகளே அதிமுகவே நக்கலாக கலாய்த்தனர்.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

இதையடுத்து ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற வாசகத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் திமுக எம்பிக்கள், முக்கிய தலைவர்கள், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என பலரும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். இந்தப் பிரச்சார கூட்டங்கள் ஊக்கத்தொகை, வாக்குறுதிகள் என சம்பிரதாயமாக நடைபெற்று முடிந்துவிட்டன.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

ஒவ்வொரு வாசகங்களும் வந்த வேகத்தில் அடங்கிவிடுகின்றன. தற்போது “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய பரப்புரையை ஜன.29 முதல் ஸ்டாலின் தொடங்குகிறார்.

ஸ்டாலினின் கலர் கலர் வாசகங்கள்… மக்கள் மத்தியில் எடுபடுமா? திமுகவுக்கு அனுகூலத்தை உண்டாக்குமா?

மக்களிடம் நேரடியாகச் சென்று, அவர்களின் பிரச்சினைகளை எழுதி வாங்கிவிட்டு, திமுக ஆட்சியமைந்ததும் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களுக்குள் அப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா என்ற பழமொழி இப்போது மனதிற்குள் ஒலிப்பதை மறுப்பதற்கில்லை.