ஸ்டாலினின் ’ஆர்.கே.நகர்’ பாணியை கையிலெடுக்கும் எடப்பாடி… டி.டி.வி.தினகரன் சமாளிப்பாரா..?

 

ஸ்டாலினின் ’ஆர்.கே.நகர்’ பாணியை கையிலெடுக்கும் எடப்பாடி… டி.டி.வி.தினகரன் சமாளிப்பாரா..?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட பத்திரிக்கையாளர்  பாக்கியராஜ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட பத்திரிக்கையாளர்  பாக்கியராஜ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வார இதழான தமிழக அரசியல் பத்திரிக்கையில் மதுரை பகுதி பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார் பாக்கியராஜ். திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் இவர் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் களமிறங்க விருப்ப மனு அளித்துள்ளார். Backiyaraj

எளிமையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கும் அதிமுக வாய்ப்பளிக்குமா..? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஜெயலலிதா இருந்தபோது குப்பனுக்கும், சுப்பனுக்கும் கூட சீட் கொடுத்து, பதவி கொடுத்து அலங்கரிப்பார்.  அப்போதைய சூழல் வேறு. 

இப்போது ஆட்சியை தக்க வைக்க தகிங்கினத்தோம் போட்டு வருகிறார் எடப்பாடி. 22 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 10 தொகுதியில் வென்றால் மட்டுமே இந்த ஆட்சி தொடரும் என்பதால் கத்தி மீது பயணம் செய்து வருகிறது அதிமுக அரசு.  ஆகையால் என்ன விலை கொடுத்தேனும் 10 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என துடியாய் துடிக்கிறார் எடப்பாடி. Edappadi

தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கணிப்புகள் கூறுவதால் அலறித் துடித்து வருகிறார் அவர். மீதமுள்ள 4 தொகுதிகளில் வென்றால் மட்டுமே எடப்பாடியின் தன்மானம் காக்கப்படும். அசுர பலத்துடன் மு.க.ஸ்டாலினும், அபார எழுச்சியுடன் டி.டி.வி.தினகரனும் இருப்பதால் அவர்களை தாண்டி வெற்றி பெற வேண்டுமானால் ’பலமான’ வேட்பாளர்களை நிறுத்தினால் கூட, வெற்றிக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். ttv dhinakaran

அப்படிப்பட்ட நிலையில் பாக்கியராஜுக்கு சீட் கிடைக்குமா? ஒருவேளை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பத்திரிக்கையாளரான மருது கணேசை களமிறக்கி சூடு கண்டது. அந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுடன் மோதி டெபாசிட்டை இழந்தது. அதேபோல் திருப்பரங்குன்றத்தில் பத்திரிக்கையாளரான பாக்கியராஜை அதிமுக களமிறக்கத் திட்டமிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.  குப்பனுக்கும் சீட் கொடுக்கும் ஜெயலலிதா வழியை பின்பற்றினால் எடப்பாடி பழனிசாமி அம்மா வழியையும் பின்பற்றி, ஆர்.கே.நகர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வழியையும் பின்பற்றி திருப்பரங்குன்றத்தில் டி.டி.வி.தினகரனுக்கு டஃப் கொடுக்கலாம். 

ஆனால் திருப்பரங்குன்றத்தில் டெபாசிட் இழக்கப்போவது யாரோ…???