ஸ்டார் வார்ஸ் பட நடிகர் பீட்டர் மேஹ்யூ காலமானார்!

 

ஸ்டார் வார்ஸ் பட நடிகர் பீட்டர் மேஹ்யூ காலமானார்!

ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்கா கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.

டெக்ஸாஸ்: ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்கா கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.

ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்காவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர்  பீட்டர் மேஹ்யூ(74). அவர் அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

peter

இந்நிலையில் பீட்டர் மரணம் அடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் நேற்று அறிவித்துள்ளனர். ஆனால் அவரின் மரணத்திற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. பீட்டர் செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தாராம். அவரின் மரணம் குறித்து அறிந்த ரசிகர்களும், ஸ்டார் வார்ஸ் படக்குழுவினரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

peter

பீட்டர் முதலில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக இருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சார்லஸ் ஷ்னீர் தான் படத்தில் நடிக்க வைத்தார். முதன் முதலாக சிந்துபாத் அன்ட் தி ஐ ஆப் தி டைகர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு 1977ம் ஆண்டு ரிலீஸான ஸ்டார் வார்ஸ் படத்தில் ஹான் சோலோவின் நண்பராகவும், துணை விமானியாகவும் நடித்து பிரபலமானார்.