‘ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி காலமானார்!

 

‘ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி காலமானார்!

பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கேரி டக்ளஸ் கர்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் நேற்று மரணமடைந்தார்

லண்டன்: பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கேரி டக்ளஸ் கர்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் நேற்று மரணமடைந்தார்.

ஹாலிவுட்டில் தி எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக், அமெரிக்கன் கிராஃபிடி, ஸ்டார் வார்ஸ், ரிட்டன் ஆஃப் ஓஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் கேரி டக்ளஸ் கர்ட்ஸ். இவரது தயாரிப்பில் வெளியான ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் முதல் இரண்டு பாகங்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது.

Gary

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கேரியின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். கேரியின் மரணம் ‘ஸ்டார் வார்ஸ்’ ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.