ஸ்டாராங்கான எடப்பாடி… வீக் ஆன மு.க.ஸ்டாலின்… சட்டையை கிழிக்க உற்சாகமூட்டிய மோடி..!

 

ஸ்டாராங்கான எடப்பாடி… வீக் ஆன மு.க.ஸ்டாலின்… சட்டையை கிழிக்க உற்சாகமூட்டிய மோடி..!

டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார் மோடி. அங்கு நிதி ஆயோக் கூட்டம் பற்றி பேசியதை விட ஆட்சியை பற்றித்தான் இருவரும் விவாதித்தாகக் கூறப்படுகிறது. 

டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார் எடப்பாடி  அங்கு நிதி ஆயோக் கூட்டம் பற்றி பேசியதை விட ஆட்சியை பற்றித்தான் இருவரும் விவாதித்தாகக் கூறப்படுகிறது. 

edappadi

அதற்கு முன் ஏற்பாடகத்தான் ஒற்றைத் தலைமை விவகாரம் முடிந்த கையோடு எடப்பாடி பழனிசாமி ஓடோடிப்போய் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது நிதி ஆயோக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், நிச்சயமாக அதற்காக ஆளுநரை அவர் சந்திக்கவே இல்லை என அடித்துக் கூறுகின்றனர் தலைமை செயலக வட்டாரங்கள். 

சட்டசபை கூட்டத்தை கூட்டினால், முதலில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அது பாதகமாக மாறி விட்டால் என்ன செய்வது என்பது குறித்து என்று ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், ’‘அதைப்பற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாதீர்கள். அனைத்தையும் மேலிடத்தில் உள்ள உள்துறை பார்த்துக் கொள்ளும்’’ என எடப்பாடிக்கு தைரியமூட்டினாராம் ஆளுநர். 

edappadi

எதிர்கட்சிகள் சட்டசபையை கூட்டச் சொல்லி நெருக்கடி கொடுக்கின்றன. ஆகையால், எப்போது சட்டசபை கூட்டத் தொடரை கூட்டலாம் என ஆலோசனை கேட்டிருக்கிறார் எடப்பாடியார். அதற்கு ஆளுநர், ஜூலையில் வைத்து கொள்ளலாம் எனக் கூறி இருக்கிறார். அடுத்து, ’எதுவாக இருந்தாலும் நான் தான் உள்துறைக்கு அறிக்கை தர வேண்டும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறி இருக்கிறார். அமைச்சரவை மாற்றும் மற்றும் விரிவாக்கத்தை பற்றி சொல்லி இருக்கிறார் எடப்பாடி. 

குறைந்த அளவில் மட்டுமே மாற்றம் நடப்பதால் அதை ஆளுநர் மாளிகையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து பேரறிவாளன் உள்ளாட்சி தேர்தல் ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ’முன்பை விட நீங்கள் தைரியமாக ஆட்சியை நடத்துங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பி இருக்கிறார். அதன் பிறகே மோடியை போய் தைரியமாக பார்த்து பல விஷயங்களை பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதே போல் இன்று இரவு அமித் ஷா, மதியம் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரையும் எடப்பாடி சந்தித்து பேசும் போது பல விஷயங்களை பற்றி ஆலோசிக்க இருக்கிறார். ஆக மொத்தத்தில் எடப்பாடி அரசை எவராலும் அசைக்க முடியாது என்பதே உறுதியான நிலவரம். 

stain

இதனால், மு.க.ஸ்டாலின் தரப்பு முதல்வர் நாற்காலியை எட்டி எட்டி பார்த்து ஏக்கத்தில் ஏமாந்து தவிக்கப்போகிறார். அடுத்து சட்டசபை கூடும்போது எதையாவது காரணம் கூறி சட்டையை கிழித்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வதை தவிர அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாய் அடிபடுகிறது.