ஸ்கெட்ச் சேகருக்கு இல்ல சவுந்தரு, ட்ரூகாலர் பயன்படுத்துற நமக்குத்தான்

 

ஸ்கெட்ச் சேகருக்கு இல்ல சவுந்தரு, ட்ரூகாலர் பயன்படுத்துற நமக்குத்தான்

எந்த ஒரு ஆப் தரவிறக்கம் செய்யும்போதும், நமது போனில் இருக்கும் போட்டோ, வீடியோ, கான்டாக்ட்ஸ் முதற்கொண்டு அத்தனைக்குமான அனுமதியை கேட்டுப் பெறுகின்றன ஒவ்வொரு நிறுவனமும். அந்தந்த ஆப்களை இலவசமாக தருவதால் அவர்களுக்கு பயன் இல்லாமல் இருக்குமா? இருக்கிறதாம்.

ஃப்ரீ ஆப்ஸ் ஒண்ணுவிடாம இன்ஸ்டால் பண்ணி அப்-டு-டேட்டா இருக்க ஆசைப்படுற கணவான்களே சீமாட்டிகளே, உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. ட்ரூகாலர் என்றில்லை, எந்த ஒரு ஆப் தரவிறக்கம் செய்யும்போதும், நமது போனில் இருக்கும் போட்டோ, வீடியோ, கான்டாக்ட்ஸ் முதற்கொண்டு அத்தனைக்குமான அனுமதியை கேட்டுப் பெறுகின்றன ஒவ்வொரு நிறுவனமும். அந்தந்த ஆப்களை இலவசமாக தருவதால் அவர்களுக்கு பயன் இல்லாமல் இருக்குமா? இருக்கிறதாம்.

Data Sold to DarkWeb

தன்வசம் உள்ள பயனாளர்களின் மொத்த தரவினையும் இணையத்தின் முகமூடி கொள்ளையர்களுக்கு நல்ல ரேட் பேசி ட்ரூகாலர் நிறுவனம் விற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய பயனாளர்களின் தகவல்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், வெளிநாட்டினரின் தகவல்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரைக்கும் பேரம் படிந்திருக்கிறது. நம்முடைய தகவல்களை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வாங்கி அவன் என்ன பண்ணப் போறான் என்று அம்மாஞ்சியாக நினைத்திருக்க வேண்டாம்.

Truecaller

தகவல்கள்தான் பெரிய சொத்து. நம்முடைய தகவல்களை ஒன்றரை லட்சம் வரைக்கும் குடுத்து வாங்குகிற நிறுவனம், நம்மிடம் இருந்து 15 லட்ச ரூபாயாவது சம்பாதிக்க பார்க்கும், நேர் வழியில் அல்லது ஏதாவது ஒரு வழியில். ட்ரூகாலரின் 14 கோடி பயனாளர்களின் பாதி பேருக்கு மேல் இந்தியர்கள்தான்.