ஸ்கூல்ல போன் யூஸ் பண்ண கூடாது- அட்வைஸ் செய்த தல அஜித் – வைரலாகும் வீடியோ!

 

ஸ்கூல்ல போன் யூஸ் பண்ண கூடாது- அட்வைஸ் செய்த தல அஜித் – வைரலாகும் வீடியோ!

ஸ்கூல்ல போன் யூஸ் பண்ண கூடாது,அதனால போட்டோ வேணாமே என்று மாணவர்களுக்கு நடிகர் அஜித் அட்வைஸ் பண்ணும் வீடியோ  ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: ஸ்கூல்ல போன் யூஸ் பண்ண கூடாது,அதனால போட்டோ வேணாமே என்று பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  நடிகர் அஜித் அட்வைஸ் பண்ணும் வீடியோ  ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமீபகாலமாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

 

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் பள்ளி ஒன்றில் நடந்து வருகிறது. அப்பள்ளி ஊழியர்கள் சிலர் அஜித்திடம் போட்டோ எடுக்க கேட்கின்றனர்.அதற்கு அஜித், ‘மேடம் போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, ஸ்கூல்ல போன் யூஸ் பண்ண கூடாது, நான் சொல்லி அனுப்புறேன் கண்டிப்பாக இன்னொரு நாள் எடுத்துக்கலாம்’ என்று அழகாக அட்வைஸ் செய்கிறார்.

 

பெரிய நடிகர் என்ற எண்ணம் இல்லாமல், நிதானமாய் நின்று  பள்ளி ஊழியர்களிடம்  பேசி விட்டு அஜித் செல்வது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.