ஸம்ப்பா வச்சிருந்தது கர்ச்சிஃப் ! கேப்டன் விளக்கம்

 

ஸம்ப்பா வச்சிருந்தது கர்ச்சிஃப் ! கேப்டன் விளக்கம்

ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்ப்பா குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் பதிலளித்துள்ளார். 

ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்ப்பா குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் பதிலளித்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஷம்ப்பாவின் செயல்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. பந்தை சேதப்படுத்தும் விதமாக தனது பாக்கெட்டில் ஏதோ வைத்திருந்தார் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இது குறித்து பதிலளித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் , ஸம்ப்பா கையில் ஈரப்பதத்தை உறிஞ்ச ‘HAND WARMERS’ தான் வைத்திருந்தார். அதில் எந்த தவறும் இல்லை , அது தமக்கு முன்னரே தெரியும் என்றும் பதிலளித்துள்ளார்.