ஷோயப் அக்தரின் 161.3 கிமீ வேகப் பந்து வீச்சை முறியடித்தாரா இலங்கை வீரர்? – வீடியோ உள்ளே!

 

ஷோயப் அக்தரின் 161.3 கிமீ வேகப் பந்து வீச்சை முறியடித்தாரா இலங்கை வீரர்? – வீடியோ உள்ளே!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் 175 கிமீ வேகத்தில் பந்து வீசியதாக பதிவாகியுள்ளது.

ப்ளாம்போன்டைன்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் 175 கிமீ வேகத்தில் பந்து வீசியதாக பதிவாகியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த 19-ஆம் தேதி இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இலங்கை அணி சார்பில் இப்போட்டியில் தவறுதலாக ஓர் உலக சாதனை நிகழ்ந்தது. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இலங்கை வீரர் மதீஷா நான்காவது ஓவரை வீசினார். அவர் வைடாக வீசிய பந்து ஒன்றின் வேகம் 175 கிமீ என்று டிஸ்பிளேவில் காட்டப்பட்டது. இதைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

ஏனெனில், இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் வீசிய 161.3 கிமீ வேகம் கொண்ட பந்தே உலக சாதனையாக இருந்தது. ஆனால் மதீஷா வீசிய பந்து உண்மையில் அவ்வளவு வேகம் கொண்டதல்ல. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக பதிவானது பின்னர் தெரிய வந்தது. எனவே ஷோயப் அக்தரின் உலக சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அந்த சாதனை தொடர்கிறது.