ஷேட்ஸ் ஆஃப் சாஹோ: அதிரடி ஆக்‌ஷன் சேசிங்கில் அசத்தும் ஸ்டைலிஷ் பிரபாஸ்!

 

ஷேட்ஸ் ஆஃப் சாஹோ: அதிரடி ஆக்‌ஷன் சேசிங்கில் அசத்தும் ஸ்டைலிஷ் பிரபாஸ்!

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சாஹோ’ படத்தின் டீசர் ரிலீசாகியுள்ளது.

ஹைதராபாத்: ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சாஹோ’ படத்தின் டீசர் ரிலீசாகியுள்ளது.

‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ திரைப்படத்துக்காக கிட்டதட்ட 5 ஆண்டுகளை அர்ப்பணித்த பிரபாஸ், அதைத் தொடர்ந்து ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். பிரபாஸுக்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ தமிழ்-தெலுங்கு-ஹிந்தி என 3 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்துக்காக பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில், பிரபாஸின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் சண்டைக் காட்சி படமான விதம் குறித்த டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அபுதாபியில் கடந்த 60 நாட்களாக நடந்த ஷூட்டிங்கில், படமாக்கப்பட்ட அதிரடி சேசிங் காட்சி அடங்கிய இந்த டீசரில் ஸ்டைலிஷ் லுக்கில் வரும் பிரபாஸ் அவரது ரசிகர்களுக்கு ஏற்ற பர்த்டே ட்ரீட் கொடுத்துள்ளார்.