‘ஷூ’வுக்குள் படுத்திருந்த நல்லபாம்பு…மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!

 

‘ஷூ’வுக்குள் படுத்திருந்த நல்லபாம்பு…மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!

பின்னர் அவளது பெற்றோர், பாம்பு பதுங்கியிருந்த ‘ஷூ’வின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து மூடினர். 

தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவருடைய 9 வயதான மகள் அவந்திகா அப்பகுதியில் உள்ள பள்ளியில்  4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவந்திகா தனது ‘ஷூ’ வை வீட்டுக்கு வெளியே கழற்றி போடுவது வழக்கம்.

ttn

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகப் புறப்பட்ட அவந்திகா தனது ஷூவை போட முற்பட்ட போது  அதிலிருந்து புஸ்ஸ்ஸ்….என்று சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று பார்த்த போது ஷூவுக்குள்  பாம்பு ஒன்று சுருண்ட நிலையில் படுத்திருந்தது. இதனால் பயந்து அலறிய அந்த சிறுமி ஷூவை தூக்கி வீசிவிட்டுப் பெற்றோரிடம் ஓடி சென்று கூறியுள்ளார். பின்னர் அவளது பெற்றோர், பாம்பு பதுங்கியிருந்த ‘ஷூ’வின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து மூடினர். 

ttn

இதுகுறித்து பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர், ‘ஷூ’வுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தார். பின்னர் அந்த பாம்பு தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது