ஷூட்டிங் ஸ்பாட்டில் தோசை சுட்டு அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

 

ஷூட்டிங் ஸ்பாட்டில் தோசை சுட்டு அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  தன்னை இயக்குநரின் நாயகி என்று கூறிக் கொள்ளும் ஐஸ்வர்யா, கதையின் நாயகியாகவே திகழ்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருந்தார்.

வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய படத்தில்  ’பத்மா’ கதாபாத்திரத்தில் சிரமமே இல்லாமல் நடித்து பெயர் வாங்கி சென்றார். அதேபோல் கனா  படமும் ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இருப்பினும் சாமி 2, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள்  அவருக்கு சுமாராகவே அமைந்தது.குறிப்பாக  நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ஷூட்டிங் ஸ்பாட்டில்  தோசை ஊற்றும் வீடியோவை பதிவிட்டு அதில் செஃப் ஐஸ்வர்யா ராஜேஷ் என பதிவிட்டுள்ளார். முட்டை தோசை அதில் வெங்காயம் என நேர்த்தியாகச் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.