ஷீலா தீட்சித் – மற்றுமொரு காங்கிரஸ் மணிமகுடம் சாய்ந்தது!

 

ஷீலா தீட்சித் – மற்றுமொரு காங்கிரஸ் மணிமகுடம் சாய்ந்தது!

தலைநகர் டெல்லியில் மெத்த படித்தவர்கள் எவ்வளவு பேர் இந்திருப்பார்கள்? எவ்வளவு வெளிமாநிலத்தவர்கள் டெல்லிவாசிகளாக இருந்திருப்பார்கள். அத்தனை பேரின் விருப்பத்தையும் பெற்று தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதலமைச்சராக ஷீலா இருந்திருக்கிறார் என்றால், அவரின் நிர்வாக திறமையேயன்றி வேறென்ன?

மூன்று முறை தொடர்ந்து டெல்லியை ஆண்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித் தமது 81வது வயதில் இன்று காலமானார். படித்த மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆட்சி செய்வதில் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று, என்னதான் சிறந்த ஆட்சியைக் கொடுத்தாலும் திருப்தியடையாத வாக்காளர்கள் அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியை வீட்டுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருப்பதுதான். தலைநகர் டெல்லியில் மெத்த படித்தவர்கள் எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்? எவ்வளவு வெளிமாநிலத்தவர்கள் டெல்லிவாசிகளாக இருந்திருப்பார்கள். அத்தனை பேரின் விருப்பத்தையும் பெற்று தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதலமைச்சராக ஷீலா இருந்திருக்கிறார் என்றால், அவரின் நிர்வாக திறமையேயன்றி வேறென்ன?

Sheila Dixit

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி, பாஜகவின் வளர்ச்சி என மும்முனைப்போட்டியில் 2013ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த ஷீலா, அரசியலிலிருந்து விலகியிருக்க தொடங்கினார். 70 வயதில் வேறென்ன செய்யவேண்டும்? ஆனாலும், காங்கிரஸ் கட்சி அவரை கேரள ஆளுநராக நியமித்து கவுரவமாக வழியனுப்ப நினைத்தது. அடுத்த ஆண்டில், 2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் நியமித்த ஆளுநர்களை நீக்கியதில், ஷீலாவும் பதவி விலக நேர்ந்தது.

Sheila Dixit

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி பிரதேச காங்கிரஸில் நிலவிய குழப்பத்தைத் தீர்க்க ஷீலாவை திரும்பவும் தலைமை அழைத்தது. கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவராக திரும்பவும் காங்கிரஸை வழிநடத்த வந்தார். ஆனாலும் அவருக்கு வெற்றி கைகூடவில்லை. டெல்லி மக்களின் அன்புக்கு என்றும் உரிய ஷீலா, தமது 81வது வயதில் மரணமடைந்துவிட்டார். காங்கிரஸுக்கு பேரிழப்பு. டெல்லிக்கும்!