ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்போவதாக வெளியான தகவல் வதந்தி !

 

ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்போவதாக வெளியான தகவல் வதந்தி !

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பாத்ரியில் இருக்கிறது. அந்த இடத்தை மேம்படுத்த ரூ .100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பாத்ரியில் இருக்கிறது. அந்த இடத்தை மேம்படுத்த ரூ .100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  சாய் பாபாவின் பிறப்பிடம் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை, ஷீரடியில் தங்கியிருந்த காலத்தில் சாய் பாபாவே தனது பிறப்பிடம் அல்லது மதம் குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இருக்கையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

saibaba

சாய் பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று உத்தவ் தாக்கரே கூறியதை எதிர்த்து மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலைக் காலவரையின்றி மூட அக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் நாளை முதல் ஷீரடி கோவில் மூடப்படுவதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாயின. 

இந்நிலையில், ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பரவி வரும் தகவலுக்கு அக்கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.