ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம்

 

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம்

டூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

டோக்கியோ: டூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது. தற்போது பிரபலமாகி வரும் டிஸ்பிளே நாட்சை, இந்த ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் மூலம் ஒரு படி முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. அக்குவாஸ் ஆர்2 ஸ்னாப்டிராகன் 845 பிராசசர், 5.2 இன்ச் டிஸ்பிளே, 64 ஜிபி உள்ளடக்க மெமரி, வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டின் விலை தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானில் ஜனவரி மாதம் முதல் சாஃப்ட் பேங்க் வழியாக கிடைக்கும். மேலும் முன்னர் குறிப்பிட்டது போல இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு நாட்ச்கள் உள்ளன. ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்டில் அலுமினியம் ஃப்ரேம், வலது மூலையில் ஒலியை கூட்ட குறைக்க பட்டன்கள் மற்றும் போனின் முன்புறம் ஒரு கேமிராவும், பின்புறம் ஒரு கேமிராவும் உள்ளது.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டில் 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி + டிஸ்பிளேயுடன் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் டெம்பர் கிளாஸ் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 பிராசசர் மற்றும் 4 ஜிபி ரேம்  கொண்டுள்ளது. 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக 512 ஜிபி மைக்ரோSD பயன்படுத்துவதற்கான வசதியும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2500 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளது. இதன் எடை 135 கிராம் ஆகும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் மற்றும் விரல்ரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.