ஷாப்பிங் செய்யும்போது கொரோனா தொற்றில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

 

ஷாப்பிங் செய்யும்போது கொரோனா தொற்றில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

கடைகளுக்குச் செல்வோர் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு உண்டான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் வீட்டில் சேமித்து வைத்த அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலான வீடுகளில் தீர்ந்து விட்டிருக்கும். எனவே வெளியே சென்று ஷாப்பிங் செய்வது தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்வோர் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு உண்டான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

அந்த வகையில், முற்றிலும் தேவைப்படா விட்டால் நேரில் கடைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதற்கு பதிலாக, ஆன்லைன் டெலிவரி மூலம் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். அப்படி வாங்கிய பொருட்கள் அனைத்தையும் துடைத்து சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும்.

ttn

ஷாப்பிங் செய்யும் போது உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

ஷாப்பிங் செய்யும்போது மற்றவர்களிடமிருந்து 6 அடி தூரத்தில் தள்ளி வரிசையில் நிற்க வேண்டும்.

உங்கள் மூக்கு மற்றும் வாயை ஒரு துணி அல்லது சுகாதார முகமூடியால் சரியான முறையில் மூடிக் கொள்ள வேண்டும்.

கடைகளில் கூட்டம் குறைவாக இருக்கக் கூடிய நேரமாக பார்த்து கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும். அதாவது தமிழகத்தில் இரவில் கடைகள் திறக்க தடை என்பதால், அதிகாலை வேளை என்றால் சிறந்தது.

கடையில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும்போது கண்கள், மூக்கு, வாய் அல்லது முகத்தை கைகளால் தொட வேண்டாம். தவிர்க்க முடியாத சூழலில் கிருமிநாசினி கொண்டு கைகளை துடைத்து விட்டு அவற்றை செய்யலாம்.

ttn

ஷாப்பிங் செய்யும்போது இறைச்சி, கோழி, கடல் உணவு ஆகியவற்றை வாங்கினால் அவற்றை மற்ற உணவுப் பொருட்களுடன் கலக்காமல் தனியாக வைக்க வேண்டும்.

முடிந்தவரை பணம் அல்லது டெபிட், கிரெடிட் அட்டை பணப் பரிவர்த்தனையை தவிர்த்து விட்டு ஆன்லைன் மூலம் பில் பணத்தை செலுத்துங்கள். ஒருவேளை அவற்றை பயன்படுத்த நேர்ந்தால் பணம் செலுத்திய உடனேயே உங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துங்கள்.

கடையை விட்டு வெளியேறிய பிறகும் கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.

நீங்கள் வீட்டிற்கு வந்ததும் உங்கள் மளிகைப் பொருள்களைத் தள்ளி வைத்து விட்டு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை 20 விநாடிகள் கவனமாக கழுவ வேண்டும்.

பைப்பை திறந்து கொட்டும் நீரில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அலசி விட்டு குளிர்சாதன பெட்டியில் கவரில் வைத்து அவற்றை அடுக்குங்கள்.

ttn

ஆன்லைன் டெலிவரிகளை வீட்டில் பெறும்போது:

டெலிவரி கொடுக்கும் நபருடன் தொடர்பைத் தவிர்க்க ஆன்லைனில் கட்டணம் செலுத்துங்கள்.

பொருட்களை வீட்டு வாசலுக்கு வெளியே கீழே வைக்குமாறு டெலிவரி கொடுக்க வரும் நபரிடம் கூறி விடுங்கள். அதேபோல டெலிவரி கொடுக்க வரும் நபரிடம் இருந்து குறைந்தது 6 அடி தூரம் தள்ளியே நில்லுங்கள்.