ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன்- காலிறுதியில் பெடரர், ஜோகோவிச் படுதோல்வி!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன்- காலிறுதியில் பெடரர், ஜோகோவிச் படுதோல்வி!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும்  சாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது அரையிறுதிச்  சுற்றை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் காலிறுதி சுற்றில் பிரபல சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர், ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஷிவரேவை எதிர்கொண்டார்.

tennis player

ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய பெடரர் முதல் செட்டை ஜெர்மன் வீரரிடம் 6-3 என பறிகொடுத்தார். இரண்டாவது  செட்டில் சற்று நிதானித்து ஆடிய பெடரர் தொடர்ந்து போராடி 7-6 என வெற்றி பெற்றார். இருப்பினும் ஜெர்மன் வீரரின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பெடரர், மூன்றாவது செட்டில் 3-6 என தோல்வியடைந்து காலிறுதி சுற்றோடு வெளியேறினார்.

அடுத்ததாக நடைபெற்ற மற்றொரு கால் இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் ஒரு வீரரான  செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்சை எதிர்கொண்டார். துவக்கத்தில் கிரீஸ் வீரர் மீது ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், முதல் செட்டை 6க்கு 3 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். 

tennis player

சற்று சுதாரித்து ஆடிய கிரீஸ் வீரர் 7-5 மற்றும் 6-3 என அடுத்தடுத்து 2 செட்டுகளை நேர் கணக்கில் வென்று நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த தோல்வியின் மூலம் காலிறுதி சுற்றோடு ஜோகோவிச் வெளியேறினார். 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு நட்சத்திர வீரர்கள் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

-vicky