ஷாக் ஆன ஷாருக் -ஷாருக்கானின் சகோதரி புற்றுநோயால் மரணம்.-படப்பிடிப்பை ரத்து செய்து பாகிஸ்தான் போகிறார் …  

ஷாக் ஆன ஷாருக் -ஷாருக்கானின் சகோதரி புற்றுநோயால் மரணம்.-படப்பிடிப்பை ரத்து செய்து பாகிஸ்தான் போகிறார் …  

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நெருங்கிய  உறவினரும் சகோதரியுமான  நூர் ஜெஹான், பாகிஸ்தானின் பெஷாவரில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 52 . அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் கிஸ்ஸா கவானி பஜார் அருகே ஷா வாலி கட்டாலில் உள்ள   வீட்டில் நடைபெற உள்ளது

sharuk

“முன்னி என்ற புனைப்பெயரால் ஷாருக் கூப்பிடும் நூர் ஜெஹான் கடந்த சில மாதங்களாக வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர்  இன்று காலமானார்  ” என்று அவரது கணவர் ஆசிப் புர்ஹான் கூறினார் .ஷாருக்கின் தந்தையும், முன்னியின் தந்தையும் சகோதரர்கள்  என்றும், அவர் தனது சகோதரர்  ஷாருக்கை அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும்  புர்ஹான் கூறினார்.

sharuk

நூர் ஜெஹான் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உட்பட மூன்று குழந்தைகளில், தனது மூத்த மகனுக்கு தம்பி மீதுள்ள பாசத்தில் ஷாருக் என பெயரிட்டிருந்தார்.1997 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஷாருக்கை சந்திக்க நூர் ஜெஹன்  இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, ஷாருக்கிற்கு சிறப்பு பரிசுகளை கொடுத்தாரென்று ஆசிப் நினைவு கூர்ந்தார்.