ஷாக்கான சேரன்: சாதுர்யமாக காப்பற்றப்பட்ட வனிதா: இந்த வாரம் நாமினேஷன் இவர்தான்?!

 

ஷாக்கான சேரன்: சாதுர்யமாக காப்பற்றப்பட்ட வனிதா: இந்த வாரம் நாமினேஷன் இவர்தான்?!

பிக் பாஸ் சீசன் 3ன் நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் ப்ராசஸில் வனிதா விஜகுமாரை பிக் பாஸ் காப்பாற்றியுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3ன் நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் ப்ராசஸில் வனிதா விஜகுமாரை பிக் பாஸ் காப்பாற்றியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒருவார காலமாக பாச மழையில் நனைத்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ் சில மோதல்களில் ஈடுபட தொடங்கினர்.  இதில் உச்சகட்ட சுவாரஸ்யமாக, ஏவிக்ஷன் ப்ராசஸ் நேற்று நடைபெற்றது. 

vanthia

அப்போது போட்டியாளர்கள் மத்தியில் பேசிய பிக் பாஸ், ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேட் செய்யலாம். அதற்கான காரணத்தைக் கூறவேண்டும் என்றும் கடந்த வார தலைவர் வனிதா விஜயகுமாரையும், இந்த வார தலைவர் மோகன் வைத்தியாவையும் நாமினேட் செய்யக் கூடாது என்றும் அறிவித்தார். அதன்படி ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்ய தொடங்கினர். 

cheran

அதில், மதுமிதா, கவின் மற்றும் பாத்திமா பாபுவையும்,  அபிராமி, கவின் மற்றும் ஷெரின் ஆகியோர்  ஒரே மாதிரி மதுமிதா மற்றும் மீராவையும் நாமினேட் செய்தார்கள். அதே போல் மீரா, அபிராமி மற்றும் சாக்ஷியையும் நாமினேட் செய்தார்.  இதேபோல்  பாத்திமா, கவின்  மற்றும் சரவணனையும், வனிதா , சேரன் மற்றும் மீராவையும், தர்ஷன், சாக்ஷி மற்றும் மீராவையும், லோஸ்லியா, மீரா மற்றும் சரவணனையும், ரேஷ்மா,  மதுமிதா மற்றும் பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்தனர். மேலும் சரவணன்,  சேரன் மற்றும் பாத்திமாவையும், சேரன், தர்ஷன் லோஷ்லியாவையும் முகென் , சேரன் மற்றும் மீராவையும், மோகன் வைத்தியா சேரன் மற்றும் பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்தனர்.

meera

இதை தொடர்ந்து நாமினேஷன் ப்ராசஸில் , கவின், சாக்ஷி, சரவணன், பாத்திமா பாபு, சேரன், மீரா, மதுமிதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.இதில் மீராவுக்கும், மதுமிதாவுக்கும் அதிக ஓட்டுகள்  கிடைத்தன. அதே போல் பிக் பாஸ் வீட்டுக்குள் பஞ்சாயத்துத் தலைவராக மாறியுள்ள சேரன், நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றது அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சியாகவே இருந்தது. 

இருப்பினும் வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் சாதுரியமாகக் காப்பாற்றிவிட்டார். ஒருவேளை வனிதா நாமினேஷன் பிராசஸில்  இருந்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு கணிசமான ஓட்டுக்கள்  கிடைத்திருக்கும். இந்த வாரம்  மீரா மிதுன் அல்லது பாத்திமா பாபு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. மீரா மிதுன் ஆரம்பம் முதலே போலியாக இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் சொல்லி வரும் நிலையில் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சீசனில்  சம்மந்தமே இல்லாமல் யாஷிகாவை  வெளியேற்றியது போல வேறு யாரையாவது கூட அனுப்ப வாய்ப்புள்ளது என்று நெட்டிசன்கள்  கருத்து கூறி வருகின்றனர்.