வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம்

 

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம்

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அதனை கட்ட தவறும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது

புதுதில்லி: வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அதனை கட்ட தவறும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வேகன் இந்தியாவில் லட்சக்கணக்கான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனங்களின் கார்களில் விதிகளை மீறி மோசடி கருவி பொருத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. டீசல் என்ஜின்களில் இருந்து காற்று வெளியேறும் அளவை குறைத்து காட்டி காரின் செயல்திறனை உயர்த்தி காட்டும் வகையிலான சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக கூறப்பட்டது.

சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பதுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இடைக்காலமாக ரூ.100 கோடியை அபராதமாக செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த தொகையை வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் செலுத்தவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் .100 கோடி அபராத தொகையை நாளை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது