வோட்டர் ஐடி இல்லாததால் வாக்கு சாவடியில் துப்பாக்கி சூடு!? நடந்தது என்ன?

 

வோட்டர் ஐடி இல்லாததால் வாக்கு சாவடியில் துப்பாக்கி சூடு!? நடந்தது என்ன?

வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்க வந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்லி: வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்க வந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல்

ec

மக்களவை தேர்தல் இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. 

80 தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேசம்

up

நாட்டில் அதிகபட்சமாக 80 தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்தும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இதனால் இங்கு வாக்களிக்க வசதியாக  11, 235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி சூடு
 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில், சிலர் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்குச் சாவடிக்குச் செல்ல சிலர் முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இது குறித்து கருத்து  தெரிவித்த மாவட்ட நீதிபதி, 
அடையாள அட்டை இல்லாமல்  வாக்களிக்கச் சிலர் முற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

இதையும் வாசிக்க: வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பீகார் தம்பதி: ஈரோட்டில் பரபரப்பு !