வோடபோன் ஐடியா ரூ.499 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் – ரூ.555 பிளானில் வேலிடிட்டி அதிகரிப்பு

 

வோடபோன் ஐடியா ரூ.499 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் – ரூ.555 பிளானில் வேலிடிட்டி அதிகரிப்பு

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.499 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.499 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.499 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ், தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா ஆகிய பலன்கள் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இப்போதைக்கு டெல்லி, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இந்த புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் கிடைக்கிறது. மேலும் ஐடியா நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இந்த பிளானை பயன்படுத்த முடியும்.

ttn

ரூ.555 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி கூடுதலாக 7 நாட்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த பிளானில் மொத்தம் 77 நாட்கள் வேலிடிட்டி அளிக்கப்படுகிறது. மற்றபடி இந்த பிளானில் வேறு மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதே பலன்களே தொடர்கின்றன. அதாவது அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ், தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா ஆகிய பலன்கள் வழங்கப்படுகின்றன.