வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய ரூ.997 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் – என்ன ஸ்பெஷல் இதுல?

 

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய ரூ.997 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் – என்ன ஸ்பெஷல் இதுல?

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.997 என்ற புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.997 என்ற புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக கூட்டி வரும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அந்நிறுவனம் சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக சமீபத்திய டிராய் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

idea / ttn

இந்த நிலையில், ரூ.997 என்ற புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகிய பலன்கள் வழங்கப்படுகிறது.

vodafone / ttn

ஆனால் இதன் நீண்டகால வேலிடிட்டி தான் இந்த பிளானின் சிறப்பு ஆகும். இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். இத்துடன் ரூ. 499 மதிப்புள்ள வோடபோன் பிளே சந்தா, ரூ. 999 மதிப்புள்ள ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.