வை ராஜா வை! தாமரையில்  வச்சா டபுள்…கையில் வச்சா டிரிபிள்! தேர்தல் சூதாட்டம் சூடு பிடித்தது!!

வை ராஜா வை! தாமரையில்  வச்சா டபுள்…கையில் வச்சா டிரிபிள்! தேர்தல் சூதாட்டம் சூடு பிடித்தது!!

நமது நாட்டில் அரசியலே சூதாட்டம்தான்,எங்க எவ்வளவு வச்சா எவ்வளவு கிடைக்கும்,என்பதுதான் இங்கே அரசியல்.இதில் சமீபகாலமாக தேர்தல் ரிசல்ட்டை வைத்தும் சூதாட்டம் நடக்கிறது.

நமது நாட்டில் அரசியலே சூதாட்டம்தான்,எங்க எவ்வளவு வச்சா எவ்வளவு கிடைக்கும்,என்பதுதான் இங்கே அரசியல்.இதில் சமீபகாலமாக தேர்தல் ரிசல்ட்டை வைத்தும் சூதாட்டம் நடக்கிறது.

congress and bjp

ஆமாம்,ஐ.பி.எல் சூதாட்டம் போல இது தேர்தல் சூதாட்டம். இந்த சூதாட்ட மார்க்கெட்டை ‘சாட்டா மார்க்கெட்’ என்கிறார்கள்.மும்பை,டெல்லி,ஆக்ரா போன்ற நகரங்களில் சூதாட்ட புக்கிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹயூர் என்கிற சிரிய நகர்தான் இந்த சாட்டா மார்க்கெட்டின் தலைநகரமாம்.

இவர்கள் பெட்கட்டி ஆடுவது வட இந்தியாவை மட்டும் மையப்படுத்தி நடக்கிறது.தென்னிந்திய மாநிலங்களை, குறிப்பாக தமிழகத்தையும் கேரளத்தையும் அவர்கள் ஆட்டத்தில் சேர்ப்பதில்லை.காரணம் சென்ற 2014 தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோது,அதை நம்பி பெட் கட்டியதில் இவர்களுக்கு ஹெவி லாஸ்ஸாம்

voter

இவர்களின் கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது தெரியுமா?.பிஜேபி 244 – 247
காங்கிரஸ் 77-79.மீதமுள்ள 200-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற போகும் மாநிலக் கட்சிகள் அரசமைப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்கிறார்கள்.22-ம் தேதி இரவு வரை பெட்டுகள் பெறப்படும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் புக்கிகள்.உண்மையான நடுநிலையாளர்கள் இந்த புக்கிகள்தான் என்று அடித்துச்சொல்லலாம்.