வைரஸ் நிறைந்த ஆபத்தான 24 ஆப்களை நீக்கிய கூகுள் பிளே ஸ்டோர்

 

வைரஸ் நிறைந்த ஆபத்தான 24 ஆப்களை நீக்கிய கூகுள் பிளே ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வைரஸ் நிறைந்த ஆபத்தான 24 ஆப்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வைரஸ் நிறைந்த ஆபத்தான 24 ஆப்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் 28 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கள் உள்ளன. இதில் வைரஸ் நிறைந்த ஆப்களும் அடங்கும். இத்தகைய ஆப்களால் பயனர்கள் பல வகைகளில் தொந்தரவை சந்திக்கின்றனர். விலை மதிப்பற்ற தங்களது டேட்டாக்கள் முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவது வரை வைரஸ் நிறைந்த ஆப்கள் பயனர்களை நிலைகுலைய செய்கின்றன. இந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வைரஸ் நிறைந்த ஆபத்தான 24 ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மொத்தம் இந்த ஆப்களால் 38 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகள் கூகுள் பிளே ஸ்டோரில் கடந்திருந்தது. இதில் மூன்று ஆப்கள் 10 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளை கடந்தவை ஆகும்.

ttn

அவை World Zoo, Puzzle Box, Word Crossy, Soccer Pinball, Dig it, Laser Break, Word Crush, Music Roam, File Manager, Sound Recorder, Joy Launcher, Turbo Browser, Weather Forecast, Calendar Lite, Candy Selfie Camera, Private Browser, Super Cleaner, Super Battery, Virus Cleaner 2019, Hi Security 2019, Hi VPN, Free VPN, Hi VPN Pro, Net Master, Candy Gallery உள்ளிட்ட ஆப்கள் ஆகும். இந்த 24 ஆப்களும் ஒரே சீன நிறுவனத்தை சேர்ந்தவை ஆகும். ஆனால் வெவ்வேறு டெவலப்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் பதிடப்பட்டு உள்ளன. மேற்கண்ட ஆப்களை தங்கள் ஸ்மார்ட்போனில் பயனர்கள் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்திருந்தால் அவற்றை உடனடியாக நீக்கி விடுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.