வைரலாகும் வீடியோ.. கதறியழுத பாட்டி! சபாஷ் வாங்கும் பெண் காவலர்!

 

வைரலாகும் வீடியோ.. கதறியழுத பாட்டி! சபாஷ் வாங்கும் பெண் காவலர்!

நாட்டில் விண்ணைத்தொடும் விலைவாசி ஏற்றத்தினால் மனிதாபிமனம் இன்னமும் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு வீடியோ கடந்த இருதினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் விண்ணைத்தொடும் விலைவாசி ஏற்றத்தினால் மனிதாபிமனம் இன்னமும் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு வீடியோ கடந்த இருதினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வயதான மூதாட்டி, மத்திய பிரதேச மாநிலத்தில் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்.

women police

அந்த மூதாட்டிக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள தமாஹோ மாவட்டத்தின் மார்கோன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ஷ்ரதா சுக்லா, கருணையுடன் உடலில் அணிவதற்காக கம்பளிப் போர்வையையும், ஆடையையும் தருகிறார். அந்த மூதாட்டி குளிருக்கு இதமாக கால்களில் அணிந்துக் கொள்வதற்கு செருப்பும் தருகிறார்.

நடுங்கும் குளிரில் இவற்றை வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி, அதன் பின்னர் உடைந்து அழுத் தொடங்குகிறார். அந்த மூதாட்டியைத் தேற்றும் ஷ்ரதா சுக்லாவை, அதன் பின்ன்னர், அந்த மூதாட்டி கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்கிறார். இந்த வீடியோ காட்சியை காண்பவர்கள் நிச்சயமாக கண் கலங்காமல் இருக்க முடியாது. நம் நாட்டில், முதுமையில் தவிக்க விடப்படும் பெற்றோர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் விதமாகவும், இன்னமும் மக்களிடையே அன்பும், கருணையும் வழிந்தோடிக் கொண்டு தான் இருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாகவும் அந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றன. மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானும் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைப் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர், ஷ்ரதா சுக்லா போன்ற மத்திய பிரதேசத்தின் மகள்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.