வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்: நடிகர் அக்‌ஷய் குமார் , யாஷிகா அசத்தல்!

 

வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்: நடிகர் அக்‌ஷய் குமார் , யாஷிகா அசத்தல்!

வலைதளங்களில்  கடந்த ஆண்டுகளில் ஐஸ் பக்கெட், கிகி சேலஞ்ச் போன்றவை  வைரலானது.

உலகம் முழுவதும் வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்சை  நடிகர் அக்‌ஷய் குமார் செய்துள்ளார். 

வலைதளங்களில்  கடந்த ஆண்டுகளில் ஐஸ் பக்கெட், கிகி சேலஞ்ச் போன்றவை வைரலானது. தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் எனும் பாட்டில் மூடியை காலால் உதைத்து திறக்கும் புதிய சேலஞ்ச் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 

அதாவது பாட்டிலின் மூடியை காலால் உதைத்து கழற்ற வேண்டும். ஆனால் பாட்டிலுக்கு எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது என்பது தான் முக்கியமான கண்டிஷன். இதை முதலில் யுஎஃஏ குத்துச்சண்டை சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அவரை தொடர்ந்து பாடகர் ஜான் மேயரும் இதனை முயற்சி செய்து வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My kinda bottle opener ! ❤️? #weruntheworldgirls !! New things coming up ?

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் இந்த சேலஞ்சை செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல்  நடிகை யாஷிகா ஆனந்த் உள்பட பல பிரபலங்கள் பாட்டில் கேப் சேலஞ்சை  செய்து வருகின்றனர்.