வைரலாகும் சௌந்தர்யா- விசாகன் ஹனிமூன் புகைப்படங்கள்!

 

வைரலாகும் சௌந்தர்யா- விசாகன் ஹனிமூன் புகைப்படங்கள்!

 சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவர் விசாகனுடன் ஐஸ்லாந்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவர் விசாகனுடன் ஐஸ்லாந்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும்  சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கமல் ஹாசன், முகேஷ் அம்பானி, கஜோல், போனி கபூர் உள்பட சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு சௌந்தர்யா, விஷாகனோடு ஐஸ்லாந்துக்கு ஹனிமூன் சென்றுவிட்டார். அங்கு எடுத்து கொண்ட சில புகைப்படங்களை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், ‘’ஐஸ்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வருகிறோம், வாழ்க்கையை வாழ்கிறோம், கடவுள் எங்களுடன் இருக்கிறார்,வேதை மிஸ் பண்றேன்.‘’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.