வைரமுத்துவை கல்யாணம் பண்ணிக்கோங்க: சின்மயிக்கு பிரீ அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்!

 

வைரமுத்துவை கல்யாணம் பண்ணிக்கோங்க: சின்மயிக்கு பிரீ அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்!

தொடர்ச்சியாக வைரமுத்து மீது சின்மயி வைக்கும் குற்றச்சாட்டைப் பார்த்து ரசிகர் ஒருவர் கடுப்பாகிப் பொங்கி எழுந்துள்ளார். 

சென்னை: தொடர்ச்சியாக வைரமுத்து மீது சின்மயி வைக்கும் குற்றச்சாட்டைப் பார்த்து ரசிகர் ஒருவர் கடுப்பாகிப் பொங்கி எழுந்துள்ளார்.  

பிரபல பின்னணிப் பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது #MeToo மூலம் பாலியல் புகார் அளித்தார். வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வந்தார் சின்மயி. என்னதான் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதற்கு இன்னும் எந்த தீர்வும் கிட்டவில்லை. 

திரைத்துறையினர் சிலர் இவருக்கு ஆதரவாக பேசினாலும், சிலர் இவருக்கு எதிராகவே பேசுகின்றனர். ஆனால் அதை எல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் இவர் தான் சொல்ல வரும் கருத்தை தவறாமல் பதிவு செய்து வருகிறார். 

இந்நிலையில் தொடர்ச்சியாக எப்போதும் வைரமுத்து பற்றி பேசிக்கொண்டே இருந்ததாதல் கடுப்பான நெட்டிசன் ஒருவர் ‘இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. தயவு செய்து வைரமுத்துவை திருமணம் செய்து கொள்ளுங்கள்.  வைரமுத்துவைப் பற்றி பேசுவதை தவிர உங்களக்கு வேறு வேலையே இல்லையா?’ என்று கடுமையாகப் பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  சின்மயி ‘என்ன ஒரு அறிவுரை.. எனக்கு ஆர்வமில்லை’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் காட்சிகள்! அதிர்ச்சியில் படக்குழு!