வைரமுத்துவுக்கு சிபாரிசெல்லாம் செய்யலைங்க… கதறியழும் தேசிய விருது இயக்குநர்!

 

வைரமுத்துவுக்கு சிபாரிசெல்லாம் செய்யலைங்க… கதறியழும் தேசிய விருது இயக்குநர்!

‘மரம் சும்மாயிருந்தாலும், காற்று அதன் இலைகளை அசைத்துப் பார்க்காமல் விடுவதில்லை’ என்பது இசைஞானி இளையராஜாவுக்கு அப்படியே பொருந்தும் போல.

‘மரம் சும்மாயிருந்தாலும், காற்று அதன் இலைகளை அசைத்துப் பார்க்காமல் விடுவதில்லை’ என்பது இசைஞானி இளையராஜாவுக்கு அப்படியே பொருந்தும் போல. திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து தனி ஆவர்தனம் செய்து வருகிறார். எத்தனை பேர், விஞ்ஞான யுக்திகளை பயன்படுத்தி இசையமைத்து வந்தாலும், ஒரு பாடலுக்கு இசையமைக்க பல மாதங்களுக்கு யோசித்து வேலைப் பார்ப்பவர்களின் மத்தியில் இளையராஜா இசைராஜா தான் என்பதில் மாற்று கருத்து யாருக்குமே இருக்க முடியாது! அதுவும் மண் மனம் கமிழும் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர்களின் படங்களில், தன் இசையால் உயிரூட்டுவதில் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரையில் எல்லா இசையமைப்பாளர்களுக்குமே சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறார்.

தனது ‘தென்மேற்கு பருவ காற்று’ படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்துவை அணுகிய இயக்குநர் சீனு ராமசாமி, அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்ததும், அதன் பிறகான தன் அனைத்து படங்களிலும் தொடர்ந்து வைரமுத்துவிற்கு வாய்ப்புகள் கொடுத்து வந்தார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயங்களை தனது ட்விட்டர், முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, பின் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று விலாவரியாக விளக்கம் கொடுக்கும் இயக்குநர் சீனுராமி, ஒரு பேட்டியில், வைரமுத்துவையும், இளையராஜாவையும் இணைத்தே தீருவேன் என்று பரபரப்பாக தனது படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசி, இளையராஜாவின் அபிமானிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பிறகு அவ்வப்போது இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தவருக்கு, காரசாரமாக தனது மேதாவித்தனத்தை விகடனின் பேட்டியில் வைரமுத்து காட்டி, இளையராஜாவிற்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது தடங்கலாக இருந்தது.

இளையராஜா
தற்போது யுவன்சங்கர் ராஜாவின் தயாரிப்பில் இயக்கி முடித்துள்ள, தனது ‘மாமனிதன்’ படத்திற்கு யுவனும், இளையராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள் என்கிற விளம்பர யுக்தியை கையாண்டவருக்கு, மீண்டும் வைரமுத்து நினைவுக்கு வர, இளையராஜாவிடம் வைரமுத்துவிற்காக சிபாரிசு செய்ததாக தகவல்கள் கோலிவுட்டில் பரவி, ஆளாளுக்கு சீனு ராமசாமியை வறுத்தெடுக்கத் துவங்கினார்கள். 

மீடூ விவகாரத்திற்கு பிறகு பாடலாசிரியர் வைரமுத்துவை அதிகமாக எந்த இயக்குநரும் பயன்படுத்த முன்வராத நிலையில், ‘நான் அவனில்லை’ என்கிற ரகத்தில் நீண்ட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. அந்த விளக்கத்தில், ‘நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய  மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை இளையராஜாவிடம் அழைத்துச் சென்றார்.

இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன். “திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன். ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார்.
பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.  படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான். 

வைரமுத்து

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு  மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய  விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார். படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனிபாரதிக்கும் கவிஞர்  ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன். யுவன் தரப்பில் “திரு.பா.விஜய்” என்றார்கள்.  நான் சம்மதித்தேன்.

ரெக்கார்டிங் தருவாயில்  “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் அவர் வழங்கியிருக்கிறார்.  இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.

இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.  நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம். தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம். நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.’ என்று கூறியிருக்கிறார்.