வைபவுடன் ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நடிகை!

 

வைபவுடன் ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நடிகை!

நடிகர் வைபவு நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சின்னத்திரை நடிகை வாணி போஜன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் வைபவு நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சின்னத்திரை நடிகை வாணி போஜன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028- II படத்தைத் தொடர்ந்து நடிகர் நிதின் சத்யா, வைபவ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தைக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபு சார்லஸ் இயக்கவிருக்கிறார்.சஸ்பன்ஸ் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் வைபவ் கதாநாயகனாக  நடிக்கவிருக்கிறார். 

vani bhojan

மேலும் தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை வாணி போஜன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே வைபவ் நடித்த ‘மேயாத மான்’ திரைப்படத்திலும், சின்னத்திரை பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.