வைத்தீஸ்வரன் கோயில் ஸ்தல விருட்சம் வேருடன் சாய்ந்தது அரசுக்கு ஆபத்தா! ஜோதிடர்களின் கருத்து என்ன?

 

வைத்தீஸ்வரன் கோயில் ஸ்தல விருட்சம் வேருடன் சாய்ந்தது அரசுக்கு ஆபத்தா! ஜோதிடர்களின் கருத்து என்ன?

வைத்தீஸ்வரன் கோயில் ஸ்தல விருட்சம் வேருடன் சாய்ந்ததால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

 

 

முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய அற்புத ஸதலம்,4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ள ஸ்தலமாகவும்  மற்றும் அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும்,அமிர்த சஞ்சீவியும்,வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர,இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாக இத்தலத்தில் விளங்குகின்றனர். 

vaithy

 

மேலும் நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமாகவும் இக்கோயில் விளங்குகின்றது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்திருகோயிலில் கிழக்குக் கோபுர வாயிலில் அமைந்துள்ள வேம்பு ஸ்தல விருட்சமாக விளங்குகின்றது.

இதனை வேம்படிமால் என்றும் அழைகின்றனர்.இந்த ஸ்தல விருட்சமான வேப்ப மரம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். 

இத்தனை ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்ப மரம் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வேருடன் சாய்ந்தது.இத்தனை ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்தல விருட்சம் வேருடன் சாய்ந்ததால் பக்தர்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் அதிர்ந்துள்ளனர்.

vaithy

ஸதலவிருட்சம் விழுந்ததையொட்டி கோயில் கிழக்கு கோபுர வாசல் நடை சாத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த மரத்தில் கதண்டு வண்டுகள் உள்ளதால் பக்தர்கள் மேலக் கோபுர வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயிலின் ஸதலவிருட்சம் வேருடன் சாய்ந்ததை அடுத்து கோயிலில் இந்து சமய சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகள் செய்தனர்.

vaithyurt

செவ்வாய் ஸ்தலமான இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வேருடன் சாய்ந்ததால் தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என்று பிரபல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் ஜோதிடத்தில் அரசு சார்ந்த விசயங்களை குறிப்பிடும் கிரகம் செவ்வாய் ஆகும். செவ்வாய்க்கு உரிய ஸ்தலத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் அரசு துறையில் மாற்றம் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக பெரும்பாலான ஜோதிடர்கள் கருதுகின்றனர்.