வைகை எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை ரூ.6 லட்சத்துக்கு வாங்கி ஏமாந்த நபர்! – பிரபல நடிகர் மீது போலீசில் புகார்

 

வைகை எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை ரூ.6 லட்சத்துக்கு வாங்கி ஏமாந்த நபர்! – பிரபல நடிகர் மீது போலீசில் புகார்

எல்லாம் அவன் செயல், அழகர் மலை, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. இவர் நடித்து தயாரித்த படம் வைகை எக்ஸ்பிரஸ். படத்தின் பிரமோஷனுக்காக 10 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று அறிவித்தார். இதை நம்பி பலரும் டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால், படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் டிக்கெட்டை ரூ.6 லட்சத்துக்கு வாங்கி ஏமாந்ததாக பிரபல நடிகர், தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் அவன் செயல், அழகர் மலை, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. இவர் நடித்து தயாரித்த படம் வைகை எக்ஸ்பிரஸ். படத்தின் பிரமோஷனுக்காக 10 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று அறிவித்தார். இதை நம்பி பலரும் டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால், படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தயாரிப்பாளர் ஆர்.கே மீது போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார்.

actor rk

அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகஜீவராம் என்பவர் மூலம் தயாரிப்பாளர் ஆர்.கே அறிமுகம் ஆனார். தான் தயாரித்து நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படம் வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் 10 டிக்கெட்டை வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். படம் நன்றாக ஓடும் என்று ஆசை வார்த்தை கூறினார். படத்தின் டிக்கெட் ரூ.1000ம் என்று கூறி அவரிடம் ரூ.6 லட்சத்துக்கு 600 டிக்கெட் வாங்கினேன். ஆனால், படம் வெளியாகவே இல்லை. தன்னை ஏமாற்றிய தயாரிப்பாளர் ஆர்.கே மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.கே -யிடம் கேட்ட போது, “தன் மீது புகார் கூறியவர் யார் என்றே தெரியாது. வினியோகஸ்தருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக என்னை வம்பில் இழுத்துவிட்டுள்ளார்” என்றார்.
கையில் டிக்கெட்டுடன் கோவிந்தராஜை பார்க்க பரிதாபமாக உள்ளது. 10 டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம் என்று ஆர்.கே அறிவிப்பு வெளியிட்டது உண்மைதான். ஆனால் அவரை நம்பி இவ்வளவு டிக்கெட் வாங்குவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. போலீஸ் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.