வைகை எக்ஸ்பிரஸுக்கு பிறந்தநாள் விழா | கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

வைகை எக்ஸ்பிரஸுக்கு பிறந்தநாள் விழா | கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

மதுரையிலிருந்து சென்னை வரை தினந்தோறும் 497 கி.மீ தொலைவுக்கு அதிவிரைவு ரயில் சேவையான வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விரையும் அனைத்து பயணிகளுக்குமே வைகை எக்ஸ்பிரஸ் ஒரு விமானமாக தான் சேவை செய்து வருகிறது.

இது தவிர, தென்னக ரயில்வேயில் முதன் முதலில் கண்ணாடி ஜன்னல், நவீன ஜன்னல் போன்ற அம்சங்கள் கொண்ட வரப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான். பகல் நேர அதிவிரைவு ரயில் சேவையாக உள்ள வைகை எக்ஸ்பிரஸ், 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது.

vaigai express

நேற்றோடு வைகை எக்ஸ்பிரஸ் ரயில், தனது ரயில் சேவையில் 42வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதனையொட்டி, மதுரை சந்திப்பில், பொதுமக்களும், ரயில்வே அதிகாரிகளும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பூமாலை சூட்டி, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி  மகிழ்ந்தனர்.

வைகை எக்ஸ்பிரஸுக்கு வெட்டப்பட்ட கேக்கில், வெளியூருக்கு பணி நிமித்தமாக செல்லும் அனைவரையும் பாதுகாப்பு அழைத்துச் சென்றதற்கு ஆயிரக்கணக்கான கைகளின் சார்பில் லட்சக்கணக்கான நன்றிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது நெகிழ்ச்சியாய் இருந்தது.