வைஃபை இருந்தா போதும்! பிரீயா கால் செய்யலாம்! ஜியோவின் அதிரடி அறிவிப்பு

வைஃபை இருந்தா போதும்! பிரீயா கால் செய்யலாம்! ஜியோவின் அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் பாரதி ஏர்டெல் ‘வைஃபை காலிங்’ எனப்படும் வைஃபை மூலம் இலவச குரல் அழைப்புகளை செய்யும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தொடங்கியது. இப்போது, ரிலையன்ஸ் ஜியோவும் இந்தியாவில் வீடியோ மற்றும் வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. அவரவர்களின் வீடுகள்/ அலுவலகங்களில் உள்ள வைஃபை  இணைப்பை பயன்படுத்தி இலவசமாக ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்துகொள்ளலாம்.

wifi-calling-01

“ஜியோ கடந்த சில மாதங்களாக இந்த சேவையை பரிசோதித்து வருகிறது, இது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிறைவான அனுபவத்தை அளிக்கும்,” என்று ஜியோ நிறுவனம் தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜியோவின் இந்த சேவை தற்போது 150 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் நாடு முழுவதும் கிடைக்கிறது. தற்போதுள்ள ஜியோ தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வைஃபை மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் பெறலாம். 
உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்- Click

ஜியோ வைஃபை காலிங் வசதி 2020 ஜனவரி 7 முதல் 16 வரை இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும். இந்த சேவையை அறிமுகப்படுத்தியபோது, ஜியோவின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், “ஜியோவில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த அல்லது அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு ஜியோ யூஸரும் மதம் 900 நிமிடங்களுக்கு ஆடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ‘வைஃபை காலிங்’ வசதி மூலம் இனி அனைத்து அழைப்புகளையும் இலவசமாக செய்யும் வசதியைப் பெறுவார்கள். 

wifi-calling

வைஃபை காலிங் வசதியை Enable செய்வது எப்படி?

  • Settings செல்லவும்
  • Wifi Calling என்ற option தேர்வு செய்யவும்
  • அதில் Wifi  calling வசதியை on  செய்யுங்கள் 

VoLTE மற்றும் Wi-Fi Calling இரண்டையும் சுவிட்ச் ஆன் செய்தால் தடையில்லாமல் அனைத்து  அழைப்புகளும் செய்யவும் பெறவும் முடியும்.