வேளாண் மண்டலம்: எடப்பாடி சட்டம் குப்பைக்குத்தான் போகும்… வைகோ ஆவேசம்!

 

வேளாண் மண்டலம்: எடப்பாடி சட்டம் குப்பைக்குத்தான் போகும்… வைகோ ஆவேசம்!

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல மாதங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு எந்த அளவுக்கு பயன்தரும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

வேளாண் பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் சட்டம் எல்லாம் குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார்.

eps

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல மாதங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு எந்த அளவுக்கு பயன்தரும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் மதுரையில் நடந்த ம.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த வைகோ-விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்தே தீர்வது என்று மத்திய அரசு உள்ளது. எனவே, அதைத் தடுக்க முடியாது. தமிழக அரசு டெல்டா மாவட்ட பாதுகாப்புக்காக போடும் சட்டம் எல்லாம் குப்பைத் தொட்டிக்குத்தான் போகும். ஹைட்ரோ கார்பனை எதிர்க்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை தரணி பாலைவனம் ஆகும். நாடு முழுவதும் பா.ஜ.க அரசுக்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது. பா.ஜ.க நினைப்பது போல இந்தியாவை பா.ஜ.க ஆக்கிரமிப்பு செய்துவிட முடியாது. 7 தமிழர்கள் விவகாரத்தில் ஆளுநர் செய்வது தவறு… தமிழக அரசு செய்வது ஏமாற்றுவேலை” என்றார்.